Search This Blog

Sunday, July 29, 2012

பிரிவு


பள்ளி வாசலில்
மாங்காய் தின்னுவாய் நீ..

அந்த மாங்காய்க்கு
என் நாவிலும் எச்சில் ஊரும் ...
கேட்டாலும் தரமாட்டாய் ...
பிடுங்கி தின்றால் அழுதுவிடுவாய்
பிடுங்க மனமில்லாமல் விட்டு செல்வேன் ...

விவரமில்லா வயதில்
பிறந்தது உன் நட்பு ...
விளையாட்டாக பேசினோம் ..
விளையாட்டை மட்டுமே பேசினோம்...

குறும்புக்கு பெயர் போனவன் நீ ...
எனக்கும் சேர்த்து நீயே அடி வாங்கினாய் ....
ஆனாலும் என் தேர்வு தாள்களில்
உன் விடைகளே இருந்தன...

முழுக்காற் சட்டை போட்டபோது ..
மாமன் மச்சான் என்று நம்மை நாமே அழைத்துகொண்டோம் ..
கெட்டபழக்கம் அத்தனையையும்
கற்க தொடங்கினோம் ...
என் பெற்றோருக்கு உன்னை பிடிப்பதில்லை ...
என்ன வேடிக்கை ..
நீ என்னை கெடுத்தாயாம்...

பள்ளி முடித்தும்
மைதானத்தில் அரட்டை அடித்தோம் ...
மாலை பயிற்சி வகுப்பு முடிந்தும்
விடு செல்லலாமல்
தெருக்களில் நின்று கதை பேசினோம்

அப்போதெல்லாம் நம் நட்பின் ஆழம்
தெரியவில்லை

புரிந்தது பிரிவின் வலி
கல்லூரி என்னும் சாலையில்
நாம் வேறு திசைகளில் பயணித்தபோது...!!


Saturday, September 25, 2010

What to write today? Last week was pathetic, things never worked as planned and frustration was at its top. This shift sucks :-( no proper sleep and food. Had a good and sad news as well.

Saw movie 'Boss' today after a long time. Nice and good movie indeed. Looking for Robot release next week. Need to start reading again... Life pisses me often. Need to keep each step with caution. Dirty and rotten memories in mind along with the hope of ray. Lets catch the hope... :-D see you later

Sunday, September 12, 2010

The path I never been before....

This is my first blog via my Xperia mini.

My new job is neither good nor bad. Not much to comment on it. But I feel like I have I may miss my passion on cisco. OMG it shouldnot happen ;-) . From the day I joined am, thinking of switching the job. But lets see how things going to happen.....

Roamed pune for about 2 weeks to take a catchy gaget. Searched in net but nothing looks satisifed. Finally ended up in taking android and bought my xperia mini pro on 3rd Aug. Now most of the time I spent on my small devil :-)

On my birthday, I haven't received any gifts from my frds, but I received some answers for my unanswered questions, the answers made me really sick and numb. I realised that life is not the way how u make things, its all about how u accept things.. lets accept .My clock has changed entirely. Am unable to sleep in night, shift may be one of the reason, but harmony also counts.

Eversince I left infy my life has changed very much. There were times I was overjoyed , honored , sick and numb. I learnt to forgive and ask for sorry, but not to forget ...

Sunday, June 6, 2010

My Last day mail in Infy.. with cisco Touch







C:\Documents and Settings\Anantha Rajesh> telnet 127.1.1.1 …


--------------------------------------------------------------------------

WARNING: You have applied for a Job in IT services. You are required to

have authorization before you proceed and you are strictly limited

to the use set out within that authorization. Unauthorized access to or

misuse of this system or the data contained on this system is strictly

prohibited and may constitute an offense under the relevant legislation.

--------------------------------------------------------------------------

User Access Verification

Username: K. Anantha Rajesh

Password: ******

Company>

Company>en

Company>

Company# config t

Enter configuration commands, one per line. End with CNTL/Z.

Company( config )# hostname Infosys

Infosys( config )# Join clock 18 June 2007

Infosys( config )# exit

Infosys# config t

Infosys( config )# interface mysore

Infosys( config-my)# training range June 2007 to August 2007

Infosys( config-my)# ip policy route-map compree

Infosys( config-my)#end

Infosys# config t

Infosys( config )# interface Pune

Infosys( config-my)# Project range August 2007 to June 2010

Infosys( config-my)# ip policy route-map projects

Infosys( config-my)#end

Infosys# config t

Infosys( config )# route-map compree

Infosys( config-route-map)# match training-courses

Infosys( config-route-map)# set next-hop pune

Infosys( config-route-map)#end

Infosys# config t

Infosys( config )# route-map projects

Infosys( config-route-map)# set projects L3 BT

Infosys( config-route-map)#end

Infosys# config t

Infosys( config )# ip access-list extended training-courses

Infosys( config-ext-nacl)# permit training basic_computers

Infosys(config-ext-nacl )# permit training INTRO

Infosys(config-ext-nacl )# permit training ICND

Infosys(config-ext-nacl )# permit training compree

Infosys(config-ext-nacl )# deny any any

Infosys(config-ext-nacl )# end

Infosys# config t

Infosys( config )# interface Pune

Infosys( config-Pu)# Project range August 2007 to June 2010

Infosys( config-Pu)# lastday “today”

Infosys( config-Pu)# shut

Infosys( config-Pu)# end

Infosys# sh run

Building configuration …

Current configuration : 5784 bytes

!
!

Hi All,

Today is my last day in Infosys.

I Look back at amazing journey which would always have a special place in my heart.

Over the past three years, Infy have taught me more than I could ever ask for.

Working with Infy at such early stage of my career is privilege for which I would always be thankful.

Keeping it simple and short, I would say that this is definitely not the end.

We'll surely be in touch.

As it is rightly said : “ A goodbye isn't painful unless you're never going to say hello again. “

You can always reach me @ anantharajesh.k@gmail.com , +91 9766909322

Take Care,

Bbbyyeee…

Cheers,

Rajesh

Infosys(config)# hostname next-company

next-company(config)#end

next-company# quit

connection lost to the host .....

Sunday, May 30, 2010

காட்சிகள் ....

ஆலுவலகம் செல்லும் வழியில் உள்ளது அந்த ATM. அங்கு வந்து செல்பவர்களுக்கு ATM வாயிலில் உள்ள நாய் தெரியாமல் இருக்காது. மெலிந்த உடலும், முதிர்ச்சியை வெளிபடுத்தும் தோற்றமும் அதன் அடையாளம். கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் அது ATM உள்ளே வந்து படுப்பதும் அதை மக்கள் விரட்டுவதும் வழக்கமான ஒன்றுதான்.

அன்று வரிசையில் ஆட்கள் இருந்தும் நாயை ஒருவரும் விரட்டுவதாக தெரியவில்லை. அதன் அருகில் சென்று பார்த்த பொது ,நாயின் பக்கத்தில் ஒரு பிஸ்கட் பக்கெட்டும் கண்ணாடி கதவில் ஒரு தூண்டு தாள் ஒட்டப்பட்டு இருந்தது. அதில் " நான் இந்த ATMமின் நாய், நான் யாரையும் கடிக்க மாட்டேன், தயவு செய்து என்னை விரட்டாதீர் " என்று எழுதி இருந்தது. இதை பார்த்த எனக்கு ஒரு நிமிடம் ஆசிரியம் மற்றும் சந்தோசம். ஆனால் இந்த உணர்வு ஏன் எனக்கு வரவில்லை எனவும் தோன்றியது. பரபரப்பான பெருநகர வாழ்வில் தொலைந்து போன ஈவு இரக்கம் இன்னமும் சிலரிடம் இருக்கத்தான் செய்கிறது ...

சிதறல்கள் .. 1

விலைமாது:
தினமும் எங்களை
மெருகேற்றி கொள்கேறோம்.....
மற்றவர்கள் சிதைபதற்காக...!!!

திருட்டு:
கள்வன் என தெரிந்தும்
காவல் நிலையம் செல்ல மனம் இல்லை....
என் மனதை திருடியதற்காக....!!!!

குதர்க்கம்:
பின்னால் வருவதை
முன்னால் சொல்லியது....
அசரிரி அல்ல....
யானையின் மணியோசை.... :)

பஞ்சம்
படித்த பணக்காரி இடமும்
பஞ்சம் தெரிந்தது
ஆடையில் !!!

விழியீர்ப்பு விசை
சிற்பிக்குள் இருக்கும் முத்தை அறிந்தது இல்லை ,
இன்று அறிகிறேன்
வீழ்வதா , விடை பெறுவதா என்று தெரியாமல்
வீழ்ந்து விட்டேன், முத்தெடுக்க ....
என்னவள் கண் சிமிட்டுகிறாள் !!!

படித்ததில் பிடித்தது

திருக்குற்றாலக் குறவஞ்சி - கோ. இராகவன்

பிற்காலத் தமிழ் இலக்கியங்களில் மிகச் சிறந்தது திருக்குற்றாலக் குறவஞ்சி. திரிகூட ராசப்பக் கவிராயர் எழுதிய சீரிய நூல் இது. முந்நூற்றுச் சொச்ச ஆண்டுகள்தான் ஆனாலும் சுவையால் தமிழால் உணர்வார் பழந்தமிழ் நூல்களுக்கு எந்த விதத்திலும் குறையாத தனிப் பெரும் நூலாகத் திகழ்கின்றது.

திருக்குற்றாலத்தில் குடி கொண்டிருக்கும் குற்றாலநாதரைத் தலைவனாகக் கொண்டு எழுந்த நூல். பாடல்கள் முழுவதும் பக்தியும் காதலும் நகைச்சுவையும் கலந்து ருசிக்கும் அழகு நூல். சந்தங்கள் கொஞ்சக் கொஞ்ச படிப்பவர் நெஞ்சமோ இன்னும் கொஞ்சம் என்று கெஞ்சக் கெஞ்ச வைக்கும் அருமை நூல்.

இந்த நூலில் முருகப் பெருமானின் மேல் கடவுள் வாழ்த்து ஒன்று. கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்! ஆகையால் வேலவனே இந்த நூலை எழுதக் கவி தந்தான் என்று சொல்ல வேண்டும். அதை எப்படிச் சொல்வது? விளையாட்டாக எண்களை வைத்துச் சொல்லியிருக்கின்றார் நமது கவிராயர். பன்னிரண்டில் தொடங்கி ஒன்றில் முடிக்கின்றார்.

பன்னிருகை வேல் வாங்கப் பதினொருவர் படை தாங்கப் பத்து திக்கும்
நன்னவ வீரரும் புகழ மலைகளெட்டும் கடலேழு நாடி யாடிப்
பொன்னின் முடி ஆறேந்தி அஞ்சுதலை யெனக்கொழித்துப் புயநால் மூன்றாய்த்
தன்னிருதாள் தருமொருவன் குற்றாலக் குறவஞ்சித் தமிழ் தந்தானே

பன்னிரண்டு - பன்னிருகை வேல் வாங்க - பன்னிரண்டு கரங்களிலும் வேலினைப் பிடித்துக் கொண்டு

பதினொன்று - பதினொருவர் படை தாங்க - முருகப் பெருமானின் படைக் கலன்கள் மொத்தம் பன்னிரண்டு. ஆனால் பன்னிரண்டு கரங்களிலும் இப்பொழுது வேலைப் பிடித்துக்
கொண்டிருப்பதால் மற்ற பதினோரு படைக்கலங்களையும் பதினொருவர் தாங்கிக் கொண்டார்களாம்.

பத்து - பத்துத் திக்கும்
- பத்துத் திசைகளிலும். அதென்ன பத்து? எட்டுத் திக்கு என்றுதானே கேட்டுள்ளோம். மிச்ச இரண்டும் எங்கிருந்து வந்தன? சுற்றியுள்ள எட்டுத் திக்குகளோடு மேலும் கீழும் உள்ள இரண்டு திக்குகளையும் சேருங்கள். எட்டு பத்தாகும்.

ஒன்பது - நன்னவ வீரரும் புகழ - பத்துத் திசைகளிலும் நவவீரர்களால் புகழப் படுகின்ற. வீரவாகு முதலான நவவீரர்கள் என்றும் முருகப் பெருமானின் திருப்புகழைப் பாடிக் கொண்டிருப்பார்களாம்.

எட்டு, ஏழு - மலைகள் எட்டும் கடலேழும் நாடி யாடி - எட்டு மலைகளிலும் ஏழு கடல்களிலும் ஏறியும் தாவியும் குதித்தும் ஓடியும் ஆடியும் விளையாடுகின்ற

ஆறு
- பொன்னின் முடி ஆறேந்தி - ஆறு தலைகளிலும் பொன்னாலான திருமுடிகளை ஏந்திக் கொண்டிருக்கும்

ஐந்து - அஞ்சுதலை யெனக்கொழித்து - அஞ்சுதல் என்னும் வேண்டாத பண்பை என்னிடத்தில் ஒழித்து

நான்கு, மூன்று
- புய நால்மூன்றாய்த் - நால்மூன்று பன்னிரண்டு. பன்னிரண்டு தோள்களோடும்

இரண்டு - தன்னிருதாள் - தன்னுடைய இரண்டு திருவடிகளையும்

ஒன்று - தருமொருவன் - தருகின்ற ஒருவனாகிய முருகப் பெருமான்

குற்றாலக் குறவஞ்சித் தமிழ் தந்தானே - திருக்குற்றாலக் குறவஞ்சி எழுதும் பொருட்டு எனக்குத் தமிழ் தந்தானே.

வெறுமனே முருகன் தமிழைத் தந்தான் என்று சொல்லாமல். எண்களைக் கொண்டு விளையாடியிருக்கும் திரிகூட ராசப்பக் கவிராயரின் தமிழறிவை என்னவென்று வியப்பது!